தினசரி தியானம்


காணுதல்

     கண்ணுதலே, நான் யாண்டும் காண்பது உன்னையே யன்றி வேறொன்றையுமன்று. உன்னைக் காண்பதற்கிடையில் காணாதவன் போன்று கலங்கி நிற்கிறேன்.

     காணும் தன்மை எல்லா உயிர்களுக்குமுண்டு, வெளிச்சமிருக்கும் பக்கம் செடி கிளைகளை விடுவதே அது காணவல்லது என்பதற்குச் சான்று. கண்டு கொண்டிருக்கும் நாம், காண விரும்பும் பொருளை உள்ளபடி காணுதற்கான பரிபாகம் அடையவேண்டும். அப்பொழுது காண்பதெல்லாம் கடவுளே.

உடம்புஎனும் மனைஅகத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் அட்டிஉயிர்எனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதைகழல்அடி காண லாமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.