வில்லாளி வீரனே பாடல்

வீடியோ


சரணம் சொல்லி கூப்பிடுவோம்
அந்த சபரி மலை வாசனை
வரணும் என்று அழைத்திடுவோம்
வரம் கொடுக்கும் ஈசனை

அருளைத் தரும் ஆண்டவனை
அன்பருக்கு மித்திரனை
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம்
ஹரிஹர சுதன் ஐயப்பனை

வில்லாளி வீரனே...
வீரமணிகண்டனே...
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்...
சுந்தரேசன் மைந்தனை...

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சபரிமலை செல்பவர்க்கு
சஞ்சலங்கள் இல்லை
சபரிமலை செல்பவர்க்கு
சஞ்சலங்கள் இல்லை
பயம் தனையே போக்கிடுவான்
பந்தளனின் பிள்ளை

அபயம் என்று சரணடைந்தால்
அகன்றிடுமே தொல்லை
அவனன்றி அவனியிலே
அணுவும் அசைவதில்லை

வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு
எருமேலிப் பேட்டை செல்லுவோம்
சுவாமியே.... சரணம் ஐயப்பா

வீட்டை விட்டு கட்டும் கட்டி
அருள்மலை புறப்படுவோம்
கூட்டுச் சரணம் போட்டு
எருமேலிப் பேட்டை செல்லுவோம்
பேட்டைத் துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்

சாமி திந்தக்கதோம்
ஐயப்ப திந்தக்கதோம்
சாமி திந்தக்கதோம்
ஐயப்ப திந்தக்கதோம்

பேட்டை துள்ளி ஆடும்போது
பேரின்பம் கொள்வோம்
கோட்டை காவலன் வாவரு சாமியை
கொண்டாடி மகிழ்வோம்
நாம கொண்டாடி மகிழ்வோம்

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
சீர்மேவும் சபரிமலை நாதனருள் தேடு
ஈரொன்பது படியேறி ஈசன்பதம் நாடு

பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
பாரெல்லாம் காத்து நிற்கும் பரமனின் திருவீடு
நாராயணன் செல்வனையே நாவினிக்கப்பாடு
அந்த நாராயணன் செல்வன் ஐயப்பனையே
நீ நாவினிக்கப்பாடு

வில்லாளி வீரனே...
வீரமணிகண்டனே...
தமிழ் சொல்லெடுத்து பாடுவோம்...
சுந்தரேசன் மைந்தனை...

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா